Kalai Iravu 2011

அன்பிற்கினிய குவைத்வாழ் தமிழ் உறவுகளே,
பொங்குதமிழ் மன்றத்தின் முதலாவது நிகழ்ச்சியான "தமிழ்ப் புத்தாண்டு பொங்கல்  விழா " , பொங்கு தமிழ் மன்றத்தின் இரண்டாவது நிகழ்ச்சி  "உலக தாய்மொழி நாள் மற்றும் அனைத்துலக மகளிர் நாள் விழா"  மற்றும் பொங்கு தமிழ் மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி "கலை இலக்கிய விழா" சிறப்புற தாங்கள் நல்கிய ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து,

நான்காவது  நிகழ்ச்சிகளின் அறிவிப்பின் வழி தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

உலகின் தொன்குடிகளுள் ஒன்றான தமிழ்குடி, இன்றைக்கு உலகின் எல்லாவிடத்தும் பரந்து கிளைபரப்பி வாழ்கின்றது. பல்வேறு கலை இலக்கிய மரபுகளைப் பெற்றுள்ள நாம், தொடர்ந்தும் நமது வாழ்விடங்களில் இவற்றை அனுபவித்து உணர வகையின்றியுள்ளோம். ஆழ்ந்த இலக்கிய இலக்கண செழுமையுடை நமது செந்தமிழை படிக்கும் வாய்ப்பினை பெறாதவர்களா யுள்ளனர் நமது இளம் தலைமுறைத் தமிழர்கள்.

புலம் பெயர்வது வாழும் நாம், நமது பண்பாட்டினை காத்து பாரம்பரியத்தினைப் போற்றி, கலை இலக்கிய மரபுகளோடு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும் முகமாக தோன்றிய ஒரு இயக்கமாகும் இந்த பொங்குதமிழ் மன்றம். இங்கு நம்மால் இயன்ற தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளும், கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளும், பாரம்பரியம் சார்ந்த விழாக்களும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழ்மொழியின்பால் ஈடுபாடும், தமிழர்கள் முன்னேற்றத்தில் ஆர்வமும் கொண்டுள்ள தமிழ் உள்ளங்களை தங்களால் இயன்ற சமூகப் பணிக்களைச் செய்திட அன்போடு அழைக்கின்றோம், தமிழால் தமிழனாக ஒன்றிணைவோம் வாரீர்!!!...

வேண்டுகோள்

“முற்போக்கு கருத்துக்களுடன் கதை, கவிதை எழுதும் தோழர்கள், நமது பாரம்பரிய கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சியும் ஈடுபாடும் உடையோர், மொழிபெயர்ப்பில் திறமையுடையோர், சிறப்பு பயிற்சிகள் உடையோர் நமது பொங்குதமிழ் மன்றத்தில் இணைந்து செயலாற்ற வரவேற்க்கப்படுகிறார்கள்.